உம்மை பாடாம என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா
அன்பு தெய்வமே நேச தெய்வமே
இயேசையா என் இயேசையா
எளிமையானவன் சிறுமையானவன்
தண்ணீரை தேடி தாகத்தாலே
நாவறண்டு போனேனே
என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே
(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே
1.மனுஷர் பார்க்கிறவண்ணமாய்
நீர் பார்ப்பதே இல்லை
பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை
யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை
புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே
பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே
உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா
உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா
2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா
எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா
சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே
உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர்
ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே
தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே
Ummai Paadamal Song Lyrics Chords PPT, Pas. Lucas Sekar ,Ummai Paadamal Lyrics , Ummai Paadamal Song Lyrics