சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
ஸ்வாமி வாருமேன் இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்சடுதி வாருமேன்
சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே
இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ
எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே
நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே
நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே
சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanigal lyrics, salemin raja sangeyin raja lyrics, salemin raja sangeyin raja songs lyrics