Karthar Anbe Thooya Anbe Lyrics Song Chords PPT - கர்த்தர் அன்பே தூய அன்பே

கர்த்தர் அன்பே தூய அன்பே
பக்தர்கள் போற்றும் அன்பே - என்
இயேசுவின் அன்பு மா பெரிதே
எப்படி பாடுவேனோ

1. ஆண்டவர் அன்பின் ஆழம் நீளம்
அன்பின் அகலம் உயரம் கண்டேன்
இயேசு பக்தருடன் சேர்ந்துணர்ந்தேன்
இன்றதைப் பாடிடுவேன் என் - கர்த்தர்

2. இந்த உலகத் தோற்றம் முன்னே
அந்த மேலான அன்பினிலே
மாசற்றோராக நிறுத்த எம்மை
மாதேவன் தெரிந்து கொண்டார் என் - கர்த்தர்

3. என் முழு ஆத்துமா மனதுடனே
என் முழு சக்தி பெலத்துடனே
தேவனிடம் அன்பு கூர்ந்திடவே
தேடியே நாடிடுவேன் என் - கர்த்தர்

4. குற்றமில்லாத அன்புடனே
மற்றவரை நான் நேசிக்கவே
கற்பனையில் பிதானம் ஒன்றே
கைக் கொண்டு வாழ்ந்திடுவேன் - அவர் - கர்த்தர்

5. சத்துருவான மித்திரனை
சோதரன் தோழனாய் நேசித்தீரே
பாதம் பணிந்தும்மை வேண்டுகின்றேன்
பூரண அன்பருள்வீர் - திருப் - கர்த்தர்

6. ஜீவனைத் தந்த அன்பதுவே
தேவனின் சேவை செய்திடவே
கர்த்தர் வருகையை கண்டிடவே
காத்திருந்தே அடைவேன் என் - கர்த்தர்

ஆவியின் வரங்கள் ஒன்பதுவே
ஆவியின் நற்கனி ஈந்திடுமே
தேவ அருள் வரம் தேவை அதே
தாகத்தைத் தீர்த்திடுமே என்றும் - கர்த்தர்

Karthar Anbe Thooya Anbe lyrics songs, Karthar Anbe Thooya Anbe song lyrics, Karthar Anbe Thooya Anbe Lyrics Song Chords PPT - கர்த்தர் அன்பே தூய அன்பே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create