ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்
என் தேச எல்லையெங்கும்
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
இறுதி நாளில் மாம்சமான
யாவர்மேலும்
எழுப்புதல் பெருமழையாய்
இறங்கவேண்டும்
உன்னதரின் வல்லமை
உயிர்ப்பிக்கும் வல்லமை
ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும்
பொழிந்தருளும் பூமியெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்- 2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்
சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து
வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்
காண வேண்டும் அதிகமதிகமாய்
அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து
அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்
பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்
தேசமெங்கும் எழும்ப வேண்டும்
ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள்
அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்
குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்
முடவர்கள் நடக்கனுமே
வறுமையே இல்லாத தமிழ்நாடு
வன்முறையே இல்லாத தமிழ்நாடு
நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும்
நிறைந்த தமிழ்நாடு
பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
பஞ்சமே இல்லாத பாரத தேசம்
பாவமே இல்லாத பாரத தேசம்
ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள்
இல்லாத பாரத தேசம்
பொழிந்தருளும் தேசமெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
Jebamegam Elumbanum Lyrics Chords PPT - ஜெபமேகம் எழும்பனும், Jebagam Elumbanum songs lyrics JEBATHOTTA JEYAGEETHANAGL BERCHMANS, Jebagam Ezumbanum
true