இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்த
உத்தமனே தோத்ரம்!
நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச்
சித்தங்கொள்வாயென்மீது தத்தஞ்செய்தேனிப்போது.
கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோ?
காதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோ?
விண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோ?
வேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ?
அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயே;
ஆசாரியன் தீர்க்கன் ஆயனும் ஆடும் நீயே;
உன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையே;
உத்தம சத்திய முத்தே அதிபதியே!
தேனே, கனியே, என்றுந் திகட்டாத அமிர்தமே,
தீயனென் மனப்புண்கள் ஆற்றிடும் அவிழ்தமே,
வானே யிருந்துபுவி வந்தபெரும் பதமே,
மறவாது திருப்புகழ் வரைவேன் நிதம் நிதமே.
வானாசனத்திலிருந்து மனுக்குலத்தை நினைத்து
தானாமனமுவந்து தாரணியில் பிறந்து,
கோனாய் விளாங்கா நிற்கும் குருவேசுநாதனை நான்
ஏனோ மறந்து இங்கே வீணே தவிப்பது காண்.
செஞ்சோதிபோன்ற அவன் சீர்பாதத்தை எந்நாளும்
நெஞ்சாசனத்தில் வைத்து நீடூழிவாழ்தல் வேணும்,
பஞ்சாய்ப் பறந்திடுமென் பஞ்சபாதகம் யாவும்,
அஞ்சேன் அஞ்சேனே, தேவ தஞ்சம் கண்டதே போதும்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, itharai methinil songs, itharai methinil songs lyrics