நன்றி நன்றி நன்றி உமக்கே
1.ஒரு தாயைப்போல்
என்னைத்தாங்கினீர்
தகப்பனாய் இருந்தீர்
நண்பனாய் என்னை நேசித்தீர்
ஆறுதலாய் இருந்தீர்
உம்மை போல வேறு யாரும்
என்னை நேசிக்கவில்லையே
என்னை மீட்க சிலுவையில்
உம் உத்திரம் சிந்தினீர்-நன்றி
2.இதுவரை என்னை நடத்தினீர்
ஆசீர்வதிப்பவரே
இனிமேலும் என்னை நடத்துவீர்
வாக்கு தந்தவரே
உம் வாக்கை மாற்றிக்கொள்ள
நீர் மனிதன் இல்லையே
ஒரு ஒருபோதும் உம் வாக்கு
வீண் போவதில்லையே-நன்றி
3.அனாதையாய் அலைந்த என்னையும்
அன்பாய் தேடி வந்தீர்
பாவியாய் இருந்த என்னையும்
பாசமாய் அணைத்தீர்
உம் அன்பு ஒரு நாளும்
குறைந்து போவதில்லையே
உம் கிருபை என்னை விட்டு
விலகுவதும் இல்லையே-நன்றி
Nandri Nandri Nandri lyrics songs, Nandri Nandri Nandri song lyrics, Nandri Nandri Nandri Lyrics Song Chords PPT -நன்றி நன்றி நன்றி உமக்கே , tamil christian songs lyrics , ANITA KINGSLY , BISHOP KINGSLY , JOSHUA SATYA
true
true