இரக்கங்களின் தகப்பன் இயேசு
இன்றே உனக்கற்புதம் செய்வார்
நீ கலங்காதே நீ திகையாதே
உன் கண்ணீர்கள் துடைக்கப்படும்
திரளான ஜனங்களைக் கண்டார்
மனதுருகி நோய்கள் நீக்கினார்
ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்
அனைவரையும் போஷித்து அனுப்பினர்
வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்
எல்லாம் செய்ய வல்லவர்
விதவையின் கண்ணீரைக் கண்டார்
மனதுருகி அழாதே என்றார்
கிட்ட வந்து பாடையைத் தொட்டார்
மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ்
முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே
படுத்திருந்த மகளைத் தேடிச் சென்றார்
படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்
(இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார்
தொலைவில் வந்த தன் மகனைக் கண்டார்
மனதுருகி ஓடிச் சென்றார்
கழுத்தைக் கட்டி முத்தங்கள் கொடுத்தார்
கொழுத்த கன்று அடித்துக் கொண்டாடினார்
புயல் காற்றில் போராடும் சீடர்களைக் கண்டு
கடலின் மேல் நடந்தே வந்தார்
பயப்படாதிருங்கள் என்று தேற்றினார்
படகில் ஏறி பெருங்காற்றை அமர்த்தினார்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs