இறைவன் நீயே எளியனுக்
கிரங்குவாயே
மறை விளக்கி இந்நரரை மீட்க இம்
மானுவேல் எனும் நாமம் மேவியே
தரையில் வந்தவ தரித்த ஏழைகள்
தாதா ஏசுநாதா என்
அண்டர்கள் போற்றும் விண்ணோனே எங்கள்
ஆதரவாய் உற்ற கோனே நல்ல
தொண்டர்களுக் கருள் புரியும் நன் மனத்
தூயா அன்பர் நேயா என்
நன்று திகழ் பெரியோனே திவ்ய
ஞானம் எனும் பெயரோனே இயல்
அன்றும் இன்றும் ஒன்றுபோல உறும்
ஐயா ஒளிர் மெய்யா என்
எங்கும் நிறைந்த வல்லோனே அன்பர்க்
கின்பு செய்கின்ற நல்லோனே மிக
இங்கிதமாய் உனை ஏத்தித் தொழ அருள்
ஈவாய் க்ருபை ஆவாய் என்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs,Iraivan Neeiyae songs, Iraivan Neeiyae songs lyrics