இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ
எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே
அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன்
ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே
அர்ச்சியர்க் கந்நானில் அற்புதம் செய்தாண்ட ஆவியே – இந்த
ஆதிரை மீதினில் தீதகற்றியாளும் ஆவியே
ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே – இங்கு
அஞ்ஞானம் அகற்றி மெய்ஞ்ஞானம் புகட்டும் ஆவியே
சித்தம் இரங்காயோ நித்தியராகிய ஆவியே – அருள்
ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும் ஆவியே
வாரும் வாரும் கண்பாரும் பரிசுத்த ஆவியே – இன்று
வந்து சபைமீதில் சிந்தை வைத்தருளும் ஆவியே
தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே – நிதம்
சித்தம் வைத்தென் மீதில் முற்றிலுங் காத்திடும் ஆவியே
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, intha velaiyinil vantharulum songs, intha velaiyinil vantharulum songs lyrics