எந்நாளுந் துதித்திடுவீர் – அந்த
இசர வேலின் ஏகோவா வைநீர்
இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே
விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை
கர்த்தாவின் வழிசெய்யவும் – தீமை
கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்
கெம்பீர மாகச் சொல்லவும்
சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்
கண்டுகொள் பாலா இந்த சொல் மாளா
தன்னாடு தனைச் சந்தித்து – மீட்டுத்
தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்
தாசன்தா வீது வம்சத்து
இன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்
இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று
அந்தகாரத்திலிருப்போர் – சாவின்
ஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்
அங்குபிர காசமடைந்து
அந்தச மாதாந உந்தரங் கண்டிட
ஆதித்தன் தோன்றினார் ஜாதிக ளேநீர்
விந்தைப்பி தாவவர்க்கும் – ஏக
வித்தான யேசு ரக்ஷக னார்க்கும்
வீவிலா ஆவியவர்க்கும்
சந்ததம் மகிமை சந்தத மென்று
சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Ennalun Thuthithiduveer songs, Ennalun Thuthithiduveer song lyrics, tamil christian songs lyrics