ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர், நாதர் நமை-இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார்
சங்கு கனம், வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்,
எங்கள் ரட்சகரேசு நமை-வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால்
முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையு வெகுணவும்
தயவுடன் யேசு தற்காத்ததினால்
பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை-இத்
தரைதனில் குறை தணித்தாற்றியதால்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, tamil christian songs lyrics, anandame jeya jeya songs, anandame jeya jeya songs lyrics